தள்ளிப்போன
தூக்கு தண்டனை: நிமிஷா பிரியா வழக்கில் அடுத்த கட்டம் என்ன? யாரிடம் தீர்ப்பு?
Nimisha Priya Case Latest Tamil News –
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் கொலை குற்றச்சாட்டில் தூக்கு
தண்டனை பெற்றவர். சமீபத்தில் அவரது தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டு, இன்று (ஜூலை மாதம்) தூக்கிலிட
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால்
கடைசி நேரத்தில் இந்தியா மற்றும் ஏமனின் முக்கிய மதத் தலைவர்களின் தலையீட்டினால், அவரது தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், நிமிஷா பிரியா வழக்கு மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்க்கிறது.
நிமிஷா
பிரியா கொலை வழக்கு - பின்னணி
2008-ம்
ஆண்டு தனது குடும்பத்தை பொருளாதார
ரீதியாக உயர்த்துவதற்காக நிமிஷா பிரியா ஏமனுக்கு சென்று செவிலியராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் சொந்தமாக ஒரு சிறிய மருத்துவமனையும்
ஆரம்பித்தார்.
2017-ல்,
அவரது தொழில் கூட்டாளியான தலால் அப்தோ மெஹ்தியுடன் பிணக்கு ஏற்பட்டது. மெஹ்தி, நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததால், அதை மீட்டெடுக்க அவர்
முயன்றார். இதில் மெஹ்திக்கு நிமிஷா பிரியா மயக்க மருந்து கொடுத்ததாக, அதன் காரணமாக மெஹ்தி
உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து,
அவர் கொலை குற்றவாளி என 2018-ல் உறுதிசெய்யப்பட்டு, 2020-ல் தூக்கு
தண்டனை விதிக்கப்பட்டது. 2023 நவம்பரில், ஏமனின் உச்ச நீதித்துறையும் அந்த
தீர்ப்பை உறுதிசெய்தது.
தூக்கு
தண்டனையை ஒத்திவைத்தது எப்படி?
இஸ்லாமிய
சட்டத்தின் கீழ் “தியாத் (Diya)” எனப்படும் ரத்தப் பண முறையை ஏற்றுக்கொள்வதற்கான
வாய்ப்பை இந்தியாவின் முக்கிய இஸ்லாமிய தலைவர் காந்தபுரம் ஷேக் அபுபக்கர் அகமது முன்வைத்தார்.
அவர்
ஏமனில் மத குருமாரிடம் நேரடியாக
பேசி, பாதிக்கப்பட்டரின் குடும்பத்தை தியாத் மூலம் சமரசப்படுத்த முயற்சித்தார். இதன் விளைவாக, நிமிஷா
பிரியாவின் தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நிமிஷா
தரப்பும் தியாத் மூலம் சமாதானத்திற்கு தயாராக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்திய
அரசு செய்த முயற்சிகள்
இந்த
வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசின்
அட்டர்னி ஜெனரல் (AGI) விளக்கம் அளித்தார். நிமிஷா பிரியாவிற்கு தேவையான உதவிகளை அனைத்தும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும்
தெரிவித்தார்.
மேலும்,
மரணதண்டனை நிறைவேற்றும் தேதி ஒத்திவைக்கப்பட்டு, வரும் ஜூலை
18 அன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
நடைபெறவுள்ளது.
நிமிஷா
பிரியா வழக்கில் அடுத்தது என்ன?
- பாதிக்கப்பட்டரின் குடும்பம் தியாத் (ரத்தப்பணம்) ஏற்பதே முக்கிய முடிவு.
- நிமிஷா குடும்பம் சுமார் ₹8.6 கோடி இழப்பீடு தர சம்மதம் தெரிவித்துள்ளது.
- இதனால், தூக்கு தண்டனையை நிரந்தரமாக தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது.

0 Comments