துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட பந்தய கார் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
துபாயின் ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் நடைபெற்று வரும் 55வது "வாட்ச் அண்ட் ஜுவல்லரி மிட் ஈஸ்ட் ஷோ" எனும் கைக்கடிகாரம் மற்றும் நகை கண்காட்சியில் இந்த பிரம்மாண்டமான கார் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
தற்போதைய மதிப்பீட்டின்படி 10 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 83 கோடி இந்திய ரூபாய்) மதிப்புள்ள இந்த பந்தயக் காரின் மேற்பரப்பில் முழுவதும் 24 கேரட் தூய தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.
காரின் கதவுகளின் கைப்பிடிகள், பன்கள், சக்கரங்கள் மற்றும் பிற உதிரிப்பாகங்களுக்கும் தங்கமுலாம் பூசி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரமாண்டமான தோற்றம் மற்றும் உயர்ந்த மதிப்புடன் கூடிய வடிவமைப்பு பார்வையாளர்களின் கண்களை வியப்புடன் சுழலச் செய்தது.
கண்காட்சிக்கு வந்தவர்கள் பலரும் இந்த காரின் அருகே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் இது விரைவில் வைரலானது.
0 Comments